மஞ்சள் கிடங்கில் தீ விபத்து - ரூ.9 கோடி மதிப்பில் மஞ்சள் மூட்டைகள் கருகி நாசம்

0 2644

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Turmeric  கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் தீயில் கருகி நாசமானது.

முத்துக்காளிபட்டியில் முன்னாள் அதிமுக எம்.பி. சுந்தரத்துக்குச் சொந்தமான மஞ்சள் கிடங்கில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments