தமிழக பள்ளிகளில் தேவைப்பட்டால் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்தலாம் - பள்ளிக்கல்வித்துறை

0 35558

தமிழக பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியை பின்பற்றும்போது ஏற்படும் இடப்பற்றாக்குறையைப் போக்க ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை இருமடங்கு ஆகும்போது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாம் என்றும் தேவைப்பட்டால் வகுப்புகளை இரண்டு வேளைகளாக நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments