கொரோனா பாதித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று வீடு திரும்புகிறார்

0 1121

கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று மருத்துவனையிலிருந்து வீடு திரும்புகிறார்.

கடந்த 19 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் காமராஜ் சிகிச்சை பெற்று வந்தார். 

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கடந்த 30-ம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments