விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 1463
விவசாயிகள் போராட்டம்:av மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70 நாட்களைக் கடந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 71வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை போல மீண்டும் வன்முறை சம்பவம் நடக்காத வகையில், டெல்லி எல்லைகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளித்து வருவதுடன், தவறான தகவல்களை அரைகுறையாக தெரிந்துக் கொண்டு கருத்து கூற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டின் பெருவாரியான விவசாய மக்களில் ஒரு சாரார் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந் நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக 18 மாதங்கள் நிறுத்தி வைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் ஏற்காத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments