உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல சீர்திருத்தங்கள்: இந்திய விமானப் படை தளபதி பகதாரியா பேட்டி
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களை தயாரிக்க ஊக்குவித்துள்ளதாக இந்திய விமானப் படை தளபதி பகதாரியா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக வான்வெளி முழுவதையும் கண்காணிக்கும் திறனை தற்போது பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.
அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வான்வெளி துறை, உலக அளவில் வினியோக சங்கிலியில் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments