கொரோனா தொற்று இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டது அந்தமான் நிக்கோபார் தீவு..!
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு தற்போது கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது அந்த தீவில் கொரோனா தொற்றுடன் யாருமே இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு பேரும் பூரண குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் மொத்தம் 4994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 4932 பேர் குணம் அடைந்தனர் என்றும், 62 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments