பீகாரில் பெண்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு
பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான கல்வி உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பீகாரில் ஒரு கோடியே 60 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments