கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நாளை வீடு திரும்புகிறார்

0 2143
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாளை வீடு திரும்புகிறார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாளை வீடு திரும்புகிறார்.

கடந்த 19 ஆம் தேதி லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அமைச்சர் காமராஜ், பின்னர் எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 30-ம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், புதன்கிழமை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் காமராஜின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments