இங்கிலாந்து புதிய வகை வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்தது: மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம்
இங்கிலாந்தில் இருந்து உருமாற்றம் அடைந்து பரவிய புதியவகை கொரோனா வைரஸ், அதிதீவிர பரவும் தன்மையுடன், உயிருக்கே உலை வைக்கும் வகையில், மரபணு மாற்றம் அடைந்திருப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், அதிவேக தொற்றும் தன்மையுடன், பரவி வருகிறது.
இந்த அதிவேக தொற்றும் தன்மைக்கு, கொரோனா வைரஸ் பரவ உதவும், ஸ்பைக் ஜீனில் ஏற்பட்டிருக்கும், மரபணு மாற்றமே காரணம் என்கின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், மேலும், அதிதீவிர பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் பெற்று தெற்கு இங்கிலாந்தின் பகுதியொன்றில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments