ஸ்பேஸ் எக்சின் ஸ்டார்ஷிப் புரோட்டோடைப் 2ஆம் சோதனையும் தோல்வி

0 3528
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இரண்டாவது சோதனையும் தோல்வியில் முடிந்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இரண்டாவது சோதனையும் தோல்வியில் முடிந்துள்ளது.

நிலாவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மக்கள் பயணம் செய்யும் கனவுத் திட்டத்தின் முக்கிய அங்கம் இந்த ராக்கெட்.

இதன்  மாதிரி வடிவம் முதலில் கடந்த டிசம்பரில் வெற்றிகரமாக ஏவப்பட்டாலும் அது திரும்பி வந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது.

எனினும் மனதை தளரவிடாத ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்க் நேற்று எஸ்என் 9 என்ற அதன் மறுபதிப்பை டெக்சாசில் இருந்து விண்ணுக்கு ஏவ ஏற்பாடு செய்தார்.

16 மாடி அளவுக்கு உயரமுள்ள இந்த புரோட்டோடைப் ராக்கட்டும் 10 கிலோ மீட்டர் வரை உயர பறந்தது.

ஆனால்  6 நிமிடம் 26 விநாடிகளுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக சரிந்த நிலையில் அது திரும்பவும் பூமியில் விழுந்து வெடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments