கர்நாடகாவில் சிவலிங்கம் கண் திறந்ததாகத் தகவல் பரவியதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
கர்நாடகத்தில் கோவிலில் சிவலிங்கம் கண்ணைத் திறந்ததாகத் தகவல் பரவியதையடுத்து அதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பெல்காம் மாவட்டத்தில் கோகக் என்னும் ஊரில் உள்ள சங்கரலிங்கம் கோவிலில் திங்களன்று சிவலிங்கத்தின் இரு கண்களும் நன்றாகத் திறந்திருந்ததாகப் பூசாரி சாத்தப்பா தெரிவித்தார். இதையடுத்து அந்தக் காட்சியைக் காணும் ஆர்வத்தில் அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
2004ஆம் ஆண்டு இந்தச் சிவலிங்கத்தின் கண் திறந்ததாகவும், அப்போது கர்நாடகத்தில் உச்சத்தில் இருந்த டெங்கு காய்ச்சல் முடிவுக்கு வந்ததாகவும், இப்போது மீண்டும் கண் திறந்திருப்பது இந்தியாவில் கொரோனா முடிவுக்கு வருவதன் அறிகுறி என்றும் பூசாரி சாத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது அறிவியலுக்கும் இயற்கைக்கும் எதிரான கூற்று என்றும், வருமானத்தைப் பெருக்கப் பூசாரிகள் செய்யும் சித்துவேலை என்று சிலர் கூறி வருகின்றனர்.
Comments