தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2013

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்றும், நாளையும் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments