வெற்றிமாறன் படத்திற்கு முதன்முதலில் இசையமைக்கும் இசைஞானி
சென்னை தியாகராய நகரிலுள்ள எம்.எம்.பிரிவியூ திரையரங்கு, இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றப்பட்டு இன்று புதிய பாடல் பதிவுடன் துவங்கியது.
35 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் அவர் இசையமைத்து வந்த நிலையில் அங்கிருந்து வெளியே வந்து தற்போது தனது புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக இதனை மாற்றியுள்ளார்.
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் இளையராஜா அதற்கான பாடல் பதிவினை இன்று தொடங்கினார். சூரி நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments