மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர மகாராஷ்டிர அரசு முடிவு

0 4968

சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான மசோதாவை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யுமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் நானா பட்டோல் மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வரும் மார்ச் மாதம் துவங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே வாக்குச்சீட்டு முறையை கையாளும் முதலாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments