தமிழகத்தில் மேலும் 5 விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.195 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் மேலும் 5 நகரங்களுக்கு விமான சேவையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு 195 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த நிதி தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும் என்றார்.
இந்த தொகையில் சேலத்திற்கு 35 கோடியும், தஞ்சைக்கு 50 கோடியும், நெய்வேலிக்கு 30 கோடியும், வேலூருக்கு 44 கோடியும், ராமநாதபுரத்திற்கு 36 கோடியும் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் சில விமான நிலையங்கள் இயக்கத்தில் இருந்தாலும், அவற்றில் அனைத்து சேவைகளும் இல்லை. எனவே சிறிய விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
Comments