பியூச்சர் குழும வர்த்தகத்தை ரிலையன்ஸ் வாங்க இடைக்காலத் தடை: டெல்லி உயர் நீதிமன்றம்

0 2757

பியூச்சர் குழுமத்தின் சில்லறை வர்த்தகத்தை ரிலையன்சுக்கு விற்கும் நடவடிக்கைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பியூச்சர் குழுமத்தின் வர்த்தகத்தை சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம் போட்டது. இது பியூச்சர் குழுமத்துடன் தங்களுக்கு உள்ள ஒப்பந்தத்தை மீறும் செயல் என அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், அமேசானின் வழக்கை அவசரமாக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பியூச்சர் குழுமத்தின் சில்லறை வர்த்தகத்தை ரிலையன்சுக்கு விற்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடையை விதித்துள்ளது.

ஏற்கனவே திவால் நிலையில் இருக்கும் பியூச்சர் குழுமத்திற்கு இந்த தடை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments