குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியில் வன்முறை தொடர்பான வழக்குகள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த வன்முறை நிகழ்வுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்க உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டது.
அப்போது செங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
Comments