தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் விதிமீறல்கள் இல்லை - மத்திய அரசு
தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பில் விதிமீறல் எதுவும் நிகழவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,அவற்றில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், தனி சேமிப்பகங்களில் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரங்களில், சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலுடன் மட்டுமே தேசிய சுகாதார அட்டைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments