பல்முனைகளில் தாக்கும் F-15EX ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்

0 2859
இந்திய விமானப்படைக்கு ஃஎப் 15 இ எக்ஸ் ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய விமானப்படைக்கு ஃஎப் 15 இ எக்ஸ் ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக இரு நாட்டு விமானப்படை அதிகாரிகள் மட்டத்திலான தகவல்கள் பரஸ்பரம் பரிமாறப் பட்டதாக போயிங் நிறுவன உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஃஎப் 15 இ எக்ஸ் ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கினால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

ஃஎப் 15 இ எக்ஸ் ரக போர் விமானங்கள் எந்தக் காலநிலையிலும், இரவு மற்றும் பகலிலும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

பல்முனைத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்தவகை விமானங்கள் ஃஎப் 15 ரக விமானங்களிலேயே அதிகம் மேம்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments