அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்

0 4001

அமெரிக்காவில் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து Jeff Bezos விலக உள்ளார். அதே நேரத்தில் அவர் அந்நிறுவனத்தின் செயல் இயக்குநராக தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக Andy Jassy நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவராவார்.

இதற்கிடையில் அமேசான் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் இந்நிறுவனம் 125 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக லாபம் ஈட்டியுள்ளது. தொடர்ந்து 3வது காலாண்டாக இந்நிறுவனம் 100 பில்லியன் டாலருக்கும் மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments