தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகள்: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு
தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் வருகிற நாளை தமிழகம் வருகின்றனர்.
ஆறு பேர் கொண்ட மத்தியக்குழு இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் மூன்று பேர் கொண்ட ஒரு குழு நாளை விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், நாளை மறுநாள் ராமநாதபுரம், சிவகங்கையிலும் ஆய்வு செய்கிறது.
இதேபோல் டெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் மூன்று பேர் கொண்ட மற்றொரு குழு நாளை புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்கிறது.
Comments