30 வருடங்கள் தொடர்ந்து புகைப்பழக்கம்... மஞ்சள் நிறமாக மாறிய நபர்... புகைப்பிடித்ததால் நேர்ந்த விபரீதம்!
சீனாவில் 60வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக தொடர்ந்து புகைப் பிடித்து வந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.
இதனை அடுத்து அந்த நபரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் அவருக்கு நோயின் தாக்கம் அதிதீவிரமாக இருந்த காரணத்தாலும் அதிகளவு புகை பிடித்ததாலும் தோல் தன்னுடைய இயல்பு நிறத் தன்மையை இழந்து மஞ்சளாக மாறி விட்டது. இதனை அடுத்து அவரது கணையத்தில் இருந்த பித்த நீர் கட்டியை அகற்றியதை அடுத்து அந்த நபரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
Comments