ஆளில்லா குட்டி விமானம்... தாக்குதலுக்கு உதவும் குட்டி அசுரன்!

0 3646
ஆளில்லா குட்டி விமானம்... தாக்குதலுக்கு உதவும் குட்டி அசுரன்!

போர் விமானத்துடன் பறந்து சென்று பாதுகாப்பு, அளிப்பதுடன் தாக்குதலிலும் ஈடுபடும் ஆளில்லா குட்டி விமானங்களை இந்திய பாதுகாப்பு துறை உருவாக்குகிறது.

இந்திய விமானப்படையை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது. வாரியர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குட்டி விமானம், தேஜஸ் ரக விமானத்துடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் விமானத்தை இறக்கைகளுக்கு அடியில் இணைக்கப்பட்டு கொண்டு செல்லும் வகையில் இந்த குட்டி விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை விமானத்தில் இருந்தே ஏவ முடியும், அத்துடன் விமானத்துடன் இணைந்து பறந்த படியே பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளையும் இந்த குட்டி விமானம் தாங்கிச் செல்லும், ஏவுகணைகளை ஏவி எதிரிகளின் தரை மற்றும் விண் இலக்குகளை அழிப்பதோடு, எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் பறக்கும் தன்மையும் இந்த விமானங்களுக்கு உண்டு.

அடுத்த மூன்று முதல் 4 ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்றும், அப்போது இந்திய விமானப்படையின் வலு மேலும் அதிகரிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் பெங்களூருவில் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள விமான கண்காட்சியில் இந்த குட்டி விமானமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments