சிறப்பு மெட்ரோ ரயிலில் 35 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்த மனித இதயம்
தெலுங்கானா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் இன்றி இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, வேறொருவருக்கு பொருத்தப்பட்டது.
ஐதராபாத்தின் எல்.பி.நகர் காமிநேனி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த விவசாயி ஒருவரது இதயம் ஜூப்ளிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
எல்.பி.நகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு சாலை வழியாகச் சென்றால் வாகன நெரிசல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால், மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பயணிகள் இல்லாமல் சிறப்பு மெட்ரோ ரயில் மூலம், வெகு சில நிமிடங்களில் இதயம் கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது.
Comments