2020-ஆம் ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்தது- அமைச்சர் பிரகலாத் படேல் தகவல்

0 1503
2020-ஆம் ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்தது- அமைச்சர் பிரகலாத் படேல் தகவல்

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 சதவீதம் குறைந்துள்ளது.

மாநிலங்களவையில் இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் அளித்த பிரகலாத் படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2020 ஆம் ஆண்டு 26 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சமாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments