டெல்லி எல்லையில் 6 அடுக்கு பாதுகாப்பு வேலி அமைப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 69வது நாளாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், டெல்லி எல்லையில் 6 அடுக்கு பாதுகாப்பு வேலியை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக, சிமெண்ட் பிளாக்குகள், இரும்பு கம்பிகள் மற்றும் டிரக்குகள் கொண்டு எளிதில் யாரும் நுழைந்து விடாத அளவிற்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, தங்களது போராட்டம் முடிவுக்கு வராமல் அக்டோபர் வரை தொடரும் என்று பாரதிய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகேத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Comments