எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து வந்து குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு,எதிர்க்கட்சி எம்பிக்களை அமைதிப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போனது.
இதனால் நண்பகலுக்குள் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.
Comments