2 வழிச்சாலைக்கு 4 வழிச்சாலைக்கான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 1707

இரு வழிச்சாலைக்கு, நான்கு வழிச்சாலைக்கான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த  வழக்கறிஞர் முகமது ரஷ்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில், பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் இருவழி சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சுங்க சாவடி அமைத்து நான்குவழிச்சாலைக்கான சுங்க கட்டணம் வசூலித்து வருவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருவழி சாலைக்கும் நான்கு வழிச் சாலைக்கான சுங்க  கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்றும், அவ்வாறு வசூல் செய்தால் அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments