இரு எம்.டெக் படிப்பு மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலை.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? என விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற இயலாததால், சேர்க்கை இல்லை என்று அறிவித்துள்ளதாக கூறி தொடரப்பட்ட மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
சேர்க்கை ரத்து குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Comments