இந்த பியூட்டிஃபுல் பாய்க்கு மணமகள் தேவையாம்!

0 27723

 

சோசியல் மீடியாக்களில் பல மணமகள் வேண்டும். மணமகன் வேண்டுமென்ற விளம்பரங்களை பார்த்திருப்போம். இப்போது, சோசியல் மீடியாக்களிலும் பப்பிகளுக்கு மணமகள், மணமகன் தேட ஆரம்பித்து விட்டனர்.

கேரளாவில் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஒரு விளம்பரம் சுற்றி வந்தது. அதில், இந்த மலையாளி ஹேண்ட்சம் பாய்க்கு பெண் தேவை. பெண் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை கூறப்பட்டிருந்தது. விளம்பரத்தை பார்த்து விட்டு படத்தை பார்த்தால் அழகான ஆண் பப்பி ( pug dog)ஒன்று முண்டு சட்டை அணிந்து உட்கார்ந்திருந்தது.

இதைப் பார்த்த பலரும் ,  'அடேய் உங்க லொல்லுக்கு ஒரு எல்லையே இல்லையா...!' என்று கமென்ட் பதிவிட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் அந்த புகைப்படத்தை ஷேரும் செய்திருந்தனர். ஆனால், அந்த ஹேண்ட்சம் பாய்க்கு மணப் பெண் கிடைத்ததா இல்லையா என்பதுதான் தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments