தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி

0 2027
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

குறைந்தது 150 மருத்துவ பணியாளர்களை வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகளும், கோவின் செயலியில் பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடலாம் என தமிழக அரசின் பொது மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 66 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைப் போன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments