சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை தான் செய்து கொண்டார் - காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல்

0 48967

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை  பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments