மியான்மரில் ராணுவ ஆட்சி : கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் எங்கே ?
மியான்மரில் ராணுவ புரட்சியை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றி 24 மணி நேரம் கடந்த பின்னரும் கைது செய்யப்பட்ட இந்த தலைவர்கள் குறித்த எந்த விவரங்களையும் ராணுவம் வெளியிடவில்லை.
இதனிடையே தலைநகர் நேப்டாவ் (Nayptaw) உள்ளிட்ட நகரங்களை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. நகர வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, ராணுவ ஆயுத வண்டிகள் ரோந்து வந்த வண்ணம் உள்ளன.
முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதள, தொலைபேசி சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டாலும், யங்கூன் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து மூடியே கிடக்கிறது.
பிரபல புத்த துறவி ஷ்வே நியா வார் சதாயத்வா-வையும் (Shwe Nya War Sayadawa ) ராணுவம் கைது செய்துள்ளதால், பெரும்பான்மையாக உள்ள புத்த மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments