மத்திய அரசு உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட 250 டிவிட்டர் கணக்குகளை மீண்டும் செயல்பட டிவிட்டர் நிறுவனம் அனுமதி
விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டியதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் முடக்கிய டிவிட்டர் நிறுவனம், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் செயல்பட அனுமதித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காக இந்த கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு டிவிட்டருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் டிவிட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் அந்த கணக்குகளை செயல்பட அனுமதிப்பதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments