மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்வு ; இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் விலை உயரும் நிலை
மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால் இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
அதே நேரம், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்ஜ், ஏசி, எல்இடி விளக்குகள், பட்டு மற்றும் பருத்தி , சூரியசக்தி இன்வெர்ட்டர், கண்ணாடி ,வைப்பர் உள்ளிட்ட கார் உதிரி பாகங்கள், செல்லிடப்பேசி பாகங்கள், தோல் பொருள்கள், நைலான், ஃபைபர் மற்றும் யார்ன், பட்டை தீட்டப்பட்ட செயற்கை கற்கள் ஆகியவை விலை உயர வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் தங்கக் கட்டிகள், வெள்ளி மற்றும் வெள்ளி கட்டிகள், ,பிளாட்டினம், நைலான் துணி நூல், சுரங்கம் தோண்டும் இயந்திரம், தோல் பொருட்கள், காப்பீடு, மின்சாரம், வெண்கலம், சர்வதேச அமைப்புகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்..
Comments