கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து ஜோ பைடன் பரிசீலனை
அமெரிக்காவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்களுடன் அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.
ஆனால் அவர் எந்த உறுதிமொழியை அளிக்கவோ கோரவோ இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பசாகி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்க ஜோ பைடன் அரசு முன்வந்துள்ளது.
அந்தத் தொகை சுமார் இரண்டு டிரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கலாம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு லட்சம் நாற்பத்தி இரண்டாயிரம் அமெரிக்க மக்களை பலி வாங்கியுள்ள கொரோனா அந்நாட்டின் பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது.
Comments