உலகின் உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சரோவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட மாணவர்

0 2410
உலகின் ஏழு உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கிளிமஞ்சரோவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட கோரக்பூரை சேர்ந்த மலையேற்ற பயிற்சி பெற்ற மாணவர் நிதிஷ்குமாருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலகின் ஏழு உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கிளிமஞ்சரோவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட கோரக்பூரை சேர்ந்த மலையேற்ற பயிற்சி பெற்ற மாணவர் நிதிஷ்குமாருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆப்பிரிக்க நாட்டின் கிளிமஞ்சரோ சிகரத்தில் மற்ற நாட்டவர் தங்கள் தேசியக் கொடியைப் பறக்க விட சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. இதனையடுத்து உத்தரப்பிரதேச அரசின் அழைப்புக்கிணங்க மாணவர் நிதிஷ்குமார் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தான்சானியாவை அடைந்த அவர் ஜனவரி 23ம் தேதி கிளிமஞ்சரோ அடிவாரத்தை அடைந்து 25ம் தேதி மலையேற ஆரம்பித்தார்.

கடும் குளிர் பனிக்காற்று வீச இரவெல்லாம் மலையேறி அதிகாலை 6.50 மணிக்கு சிகரத்தை அடைந்து குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியை நிதிஷ்குமார் பறக்கவிட்டார். நேற்று சொந்த ஊர் திரும்பி வந்த நிதிஷ்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments