பாரதிராஜாவின் படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் நிவாஸ் காலமானார்
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர்ச்சியாக பாரதிராஜாவின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ் காலமானார்.
பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம் படத்தை இவர் இயக்கினார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவமனையில் காலமானார்.
நிவாஸ் மறைவுக்கு பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
Comments