மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்!

0 2835
மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்!

தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக புதிய சுகாதார திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இதுபோல பல்வேறு புதிய திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் திட்டம் அமல்படும் என்றும், தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்றும் இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களுக்கும் நீட்டிக்கப்படும், காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக புதிய திட்டம் அறிவிக்கப்படுவதாகவும், தனியார் வாகனங்கள் இருபது ஆண்டுகள் வரையிலும், வர்த்த நோக்கத்திற்கான வாகனங்கள் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயக்க அனுமதிக்கபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும், ஆக்கமும் ஏற்படுத்த, பொதுப் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக 1,624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும்,
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படும் என்றும், அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments