வேளாண் பொருட்களை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை... ரூ. 1.72 லட்சம் கோடி அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல்; மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும், விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்களை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் 1.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாயில் திட்டம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments