ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவு எவ்வளவு?

0 6067
ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவு எவ்வளவு?

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின்படி ஒரு ரூபாயில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் 15 காசுகளும், பெரு நிறுவனங்கள் வரி மூலம் 13 காசுகளும் கிடைக்கிறது.

மத்திய கலால் வரி மூலம் 8 காசுகளும், சுங்க வரி மூலம் 3 காசுகளும், வருமான வரி மூலம் 14 காசுகளும் வருவாய் கிடைக்கிறது. கடன் மற்றும் பொறுப்புகள் மூலம் 36 காசுகள் திரட்டப்படுகிறது.

ஒரு ரூபாயில் செலவினமான மாநில அரசுகளுக்கான வரி பங்கீடாக 16 காசுகள் வழங்கப்படுகிறது. வட்டி செலவினமாக 20 காசுகளும் ராணுவத்துக்கு 8 காசுகளும் ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு 14 காசுகள், மத்திய அரசின் ஆதரவு திட்டங்களுக்கு 9 காசுகள் மற்றும் நிதி குழு ஒதுக்கீடு 10 காசுகள் வழங்கப்படுகிறது.

மானியங்களுக்கு 8 காசுகளும், பென்சனுக்காக 5 காசுகள் இதர செலவுகளுக்காக 10 காசுகளும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments