குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத் தன்மை தேவை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0 1060
குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு அறுவுறுத்தியுள்ளது.

குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு அறுவுறுத்தியுள்ளது.

அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் முழு விபரங்களை அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குடிமராமத்து பணிகளின் விபரங்களை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் பார்க்க இயலாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், தற்போது வரை எத்தனை குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, நடைபெற்று வரும் பணிகளின் நிலை என்ன என அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments