வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு ரத்து- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 11508
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான வழக்கு ரத்து- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மிழகத்தில் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் - ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக செய்திக் குறிப்பு ஒன்றில், அவர் தெரிவித்து உள்ளார்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு என்றும் புறந்தள்ளியது கிடையாது என்றும், இந்த நல்ல முடிவை ஏற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக பணி ஆற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments