பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசுவது ஏன்? உதயநிதி ஸ்டாலினுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

0 1812
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசுவது ஏன்? உதயநிதி ஸ்டாலினுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

தாரம் இல்லாமல் பொதுவெளியில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி பேசுவது ஏன் என உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இந்த விவகாரத்தில் துணை சபாநாயகரையோ, அவரது குடும்பத்தாரையோ குற்றம் சாட்டாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் ஏன் பொதுவெளியில் ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை பேசுகிறார் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை இத்தகைய கருத்துகளை தெரிவிக்க மாட்டேன் என உதயநிதி சார்பில் உத்தரவாதம் அளிக்க அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு, அவருக்கு அறிவுரை வழங்குமாறு எடுத்துரைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments