வசூலிக்கப்பட்ட வரிக்குப் பதிலாக கெய்ர்ன் எனர்ஜிக்கு எண்ணெய் கிணறு வழங்கும் மத்திய அரசு
10 ஆயிரத்து 247 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து வெளியேறிய பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில் எண்ணெய் கிணறு ஒன்றை மத்திய அரசு வழங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்தது. ஆனால் புதிய சட்ட விதிகளின் காரணமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதன் மீது வரி விதிக்கப்பட்டது.
அதன் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கெய்ர்ன் எனர்ஜி, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் கொரானாவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பணத்திற்குப் பதிலாக எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெறப்பட்ட ரத்னா ஆர் சீரிஸ் எண்ணெய் கிணறை அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கும் என சொல்லப்படுகிறது. இந்த எண்ணெய் கிணறு அரபிக்கடலில் உள்ளது.
Comments