வளிமண்டல சுழற்சியால் இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அம்மையம் கூறியுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன், காலை நேரங்களில் பனி மூட்டத்துடனும் காணப்படும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments