காஞ்சிபுரம் அருகே பிளக்ஸ் பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே மாடியில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
காந்தி ரோடு பகுதியின் 2ஆவது மாடியில், பேனர் வைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, செந்தில் ஆகியோர் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராமல், மாடியின் மேலே செல்லும் மின்னழுத்த கம்பியின் மீது பேனர் கட்டும் கம்பி பட்டதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த செந்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments