செயின் பறிப்பில் ஈடுபட்ட கனிக்கு விழுந்த தர்ம அடி... 'கிலி ' யால் எஸ்கேப் ஆன கூட்டாளிகள்!

0 9572

நாமக்கல் அருகே பட்டப்பகலில் செயின் திருட்டில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்.

நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சேந்தமங்கலம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றுள்ளார்.

இதனை பெட்ரோல் பங்க் அருகில் உள்ளே சாலையில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். பிரியங்கா தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, சாலையைக் கடக்க நின்றுகொண்டிருந்தபோது, நோட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞர் எதிர்பாராத விதமாக பிரியங்காவின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிக் கொடியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதைத் தொடர்ந்து, பிரியங்கா நிலை தடுமாறி தனது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். அவருடன் சேர்ந்து அவர் ஒன்றரை வயதுக் குழந்தையும் கீழே விழுந்தது. அப்போது சாலையில் எந்த வாகனமும் வராததால்,அதிர்ஷ்டவசமாக பிரியங்காவும் அவர் குழந்தையும் எந்த அசம்பாவிதமுமின்றி உயிர் தப்பினர்.

இதனைக் கண்ட, அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் சிலர், திருடனை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் காவல்துறையினர், திருடனை மீட்டு, சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருட்டில் ஈடுபட்ட அந்த இளைஞர், திருநெல்வேலியைச் சேர்ந்த கனி என்பதும், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

கனியுடன் சேர்ந்து மேலும் நான்கு பேர், சில மாதங்களாகவே காரில் சென்று செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது. கனி செயின் பறித்த சமயத்தில் காரில் அமர்ந்திருந்த அந்த நான்கு பேரும், அவருக்கு கிடைத்த தர்ம அடியைப் பார்த்து மிரண்டுபோய், அவரை நிர்க்கதியாக விட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர்.

தப்பியோடிய நான்குபேரையும் சேந்தமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments