மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது குறித்து இந்தியா கவலை

0 1860
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது குறித்து இந்தியா கவலை

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்திருப்பது கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஜனநாயகம் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரின் அரசியல் சூழலை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது. 

49 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறையில் அதிகாரத்துக்கு வந்த ஆங் சான் சூகியின் கட்சி அண்மையில் நடந்த தேர்தலிலும் பெரும்பான்மை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டின் நன்மைக்காக ஒருவருடம் ஆட்சியை எடுத்துக்கொள்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments