ஆன்-லைன் வகுப்பு மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் இலவசமாக 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, 9 லட்சத்து 69 ஆயிரத்து 047 கல்லூரி மாணவர்களுக்கு எல்காட் நிறுவனம் மூலம் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதற்காக மாணவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Comments